கண்ணிநுண் சிறுத்தாம்பு – பதவுரை – பாசுரம் 6

இன்று தொட்டும்* எழுமையும் எம்பிரான்*
நின்று தன் புகழ்* ஏத்த அருளினான்*
குன்ற மாடத்* திருக்குருகூர் நம்பி*
என்றும் என்னை* இகழ்விலன் காண்மினே*

பதவுரை:

இன்று தொட்டும் – இனிமேல் எப்பொழுதாவது எண்ணும் படி இல்லாமல் இன்றே இப்பொழுதே 
எழுமையும் – இனிமேல் உள்ள காலமெல்லாம் 
எம்பிரான் – அடியேனுக்கு உபகாரம் செய்து உய்விக்கிறவரான 
நின்று தன் புகழ் – எப்போதும் இருக்கிறபடி நிரந்தரமாக தன் புகழே
ஏத்த அருளினான் – நிலைத்திருக்கும்படி அருளினான் 
குன்ற மாடத் – சிறு மலையை போன்று மணிமாட செல்வம் நிறைந்த  
திருக்குருகூர் நம்பி – திருக்குருகூரில் தோன்றிய குணபரிபூர்ணர்
என்றும் என்னை இகழ்விலன் – எக்காலத்தும் அடியேனைக் கைவிடாது  காப்போன்  
காண்மினே – காணுங்கள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top