கண்டு கொண்டென்னைக்* காரி மாறப் பிரான்*
பண்டை வல்வினை* பாற்றி அருளினான்*
எண் திசையும்* அறிய இயம்புகேன்*
ஒண் தமிழ்* சடகோபன் அருளையே*
பதவுரை:
கண்டு கொண்டென்னைக் – (கண்டு + கொண்டு + என்னை) என் தாழ்மையான நிலையைக்கண்டும் கூட என்னைக் கைக்கொண்டு (கடாக்ஷித்து / கருணையோடு அங்கீகரித்து)
காரி மாறப் பிரான் – காரிமாறனாகிய பேருபகாரனான ஆழ்வார்
பண்டை வல்வினை – அனுபவித்துக் கழியாத என்னுடைய பழவினைகளை
பாற்றி அருளினான் – முழுமையாக அழிந்துபோகும்படி செய்தருளினார்
எண் திசையும் – எல்லா திசைகளில் (எட்டு திக்கும்) உள்ளோரும்
அறிய இயம்புகேன் – அறிந்துகொள்ளும்படி ஆழ்வாரது பெருமைகளை சொல்லித் திரிவேன்
ஒண் தமிழ் – ஒன்றிய தமிழ் மாலையை அருளிய
சடகோபன் – சடத்தைக் கோபித்த எம் ஆழ்வாரது
அருளையே – கருணையே