பாசுரம்:
நாயக னாய்நின்ற நந்தகோப(ன்) னுடைய
கோயில் காப்பானே கொடித்தோன்றும் தோரண
வாசல் காப்பானே மணிக்கதவம் தாள்திறவாய்
ஆயர் சிறுமிய ரோமுக் கறை பறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்
வாயால் முன்னமுன்னம் மாற்றாதே யம்மா நீ
நேச நிலைக்கதவம் நீக்கேலோ ரெம்பாவாய்.
பதவுரை:
நாயகன் ஆய் நின்ற-(எங்களுக்கு) ஸ்வாமியாயிருக்கிற
நந்தகோபனுடைய-நந்தகோபருடைய
கோயில்- திருமாளிகையை
காப்பானே-காக்குமவனே!
கொடி தோன்றும்-த்வஜங்கள் விளங்காநிற்கும்
தோரண வாசல்-தோரணவாசலை
காப்பானே-காக்குமவனே!
மணி-ரத்தினங்கள் பதிக்கப்பெற்ற
கதவம்-கதவினுடைய
தாள் – தாழ்ப்பாளை
திறவாய்-திறக்கவேணும்
ஆயர் சிறுமியரோமுக்கு-இடைச்
சிறுமிகளான எங்களுக்கு
மாயன் – ஆச்சரியச் செயல்களையுடையவனும்
மணிவண்ணன்- நீலரத்தினம்போன்ற திரு
நிறத்தையுடையவனுமான கண்ணபிரான்
நென்னலே- நேற்றே
அறை பறை வாய் நேர்ந்தான் – சப்திக்கும் பறையைக் கொடுப்பதாக வாக்களித்தான்
துயில் எழ-(அவன்)
தூக்கத்திலிருந்து எழுந்திருக்கும்படி
பாடுவான்-பாடுவதற்காக.
தூயோமாய் வந்தோம்-பரிசுத்தைகளாக வந்திருக்கின்றோம்
அம்மா- ஸ்வாமி!
முன்னம் முன்னம் – முதன்முதலில்
வாயால் -(உம்முடைய) வாயினாலே
மாற்றாதே-மறுக்காமல்
நேசம் நிலை கதவம்-(கண்ணனிடம்) பேரன்புபூண்ட நிலைமையையுடைய கதவை
நீ-நீயே
நீக்கு-நீக்கவேணும்