திருப்பாவை பாசுரம் 29 – பதவுரை

பாசுரம்:

சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்

பொற்றா மரையடியே போற்றும் பொருள்கேளாய்

பெற்றம்மேய்த் துண்ணுங் குலத்திற் பிறந்த நீ

குற்றேவ லெங்களைக் கொள்ளாமற் போகாது

இற்றைப் பறைகொள்வா னன்றுகாண் கோவிந்தா

எற்றைக்கு மேழேழ் பிறவிக்கு முன்றன்னோ

டுற்றோமே யாவோ முனக்கேநா மாட்செய்வோம்

மற்றைநங் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்.

பதவுரை:

கோவிந்தா-கண்ணபிரானே!

சிற்றஞ்சிறு காலே-உஷ: (அதிகாலையிலே) காலத்திலே 

வந்து-(இங்கு) வந்து

உன்னை சேவித்து- உன்னை வணங்கி

உன் பொன்தாமரை அடி போற்றும் பொருள் -உனது அழகிய திருவடித்தாமரைகளை மங்களாசாஸநம் பண்ணுவதற்குப் பலனை

கேளாய் -கேட்டருளவேணும்

பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்த நீ-பசுக்களை மேய்த்து உண்ணும் இடைக் குலத்தில் பிறந்த நீ

எங்களை – எங்களிடத்தில்

குற்றேவல்- அந்தரங்க கைங்கரியத்தை

கொள்ளாமல் போகாது – திருவுள்ளம் பற்றா தொழியவொண்ணாது

இற்றைப் பறைகொள்வான் அன்று

காண் – இன்று (கொடுக்கப்படுகிற இப்) பறையைப் பெற்றுக் கொள்வதற்காக நாங்கள் வந்தோமல்லோம்

எற்றைக்கும்-காலமுள்ளவளவும்

ஏழ் ஏழ் பிறவிக்கும் – எவ்வளவு

பிறவியெடுத்தபோதிலும்

உன் தன்னோடு-உன்னோடே

உற்றோமே ஆவோம் – உறவு உடையவர்களாகக்கடவோம்

உனக்கே-உனக்குமாத்திரமே

நாம்- நாங்கள்

ஆள் செய்வோம் – அடிமைசெய்யக்கடவோம்

நம் – எங்களுடைய

மற்றை காமங்கள்-இதர விஷய விருப்பங்களை

மாற்று- தவிர்த்தருளவேணும்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top