பாசுரம்:
புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ
பிள்ளாய் எழுந்திராய் பேய் முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
வென்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக்கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்(து) அரியென்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோரெம்பாவாய்
பதவுரை:
புள்ளும்-பறவைகளும்
சிலம்பின காண்- கூவிக்கொண்டு செல்லாநின்றன காண்;
புள் அரையன் கோஇலில்-பட்சிகளுக்கு அரசனான கருடாழ்வானுக்கு ஸ்வாமியான ஸர்வேச்வரனுடைய ஸந்நிதியிலே,
வெள்ளை விளி சங்கின்- வெண்மையானதும், (எல்லாரையும்) கூப்பிடுவதுமான சங்கத்தினுடைய.
பேர் அரவம் – பெரிய ஒலியையும்
கேட்டிலையோ-கேட்கவில்லையோ?
பிள்ளாய்!-(பகவத்விஷயத்தில் புதியவளான) பெண்ணே!
எழுந்திராய்-(சீக்கிரமாக) எழுந்திரு;
பேய் முலை நஞ்சு-(தாய் வடிவுகொண்ட) பேயாகிய பூதனையின் முலையில் (தடவியிருந்த) விஷத்தை,
உண்டு-(அவளுடைய ஆவியுடன்) அமுது செய்து,
கள்ளச்சகடம்-வஞ்சனை பொருந்திய சகடாஸுரனை
கலக்கு அழிய- கட்டுக் குலையும்படி
கால் ஓச்சி-திருவடிகளை நிமிர்த்து
வெள்ளத்து—திருப்பாற்கடலில்
அரவில்-ஆதிசேஷன்மீது
துயில் அமர்ந்த-திருக்கண் வளர்ந்தருளிய
வித்தினை-ஜகத்காரணபூதனான எம்பெருமானை
முனிவர்களும்-(பகவானை)
மனனம் செய்பவரும்
யோகிகளும் – யோகாப்யாஸம் செய்யும் கைங்கர்யபரர்களும்
உள்ளத்துக் கெண்டு-ஹ்ருதயத்
திலே (எம்பெருமானை) தியானித்து
மெள்ள எழுந்து-(ஹ்ருதயத்திலிருக்கும் அப்பெருமான் அசையாதபடி) ஜாக்ரதையாக எழுந்திருந்து
அரி என்ற -“ஹரிர் ஹரி:” என்ற
பேர் அரவம் – பெரிய ஒலியானது
உள்ளம் புகுந்து-எங்களுடைய நெஞ்சிலே புகுந்து
குளிர்ந்து-குளிர்ந்தது