ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:

ஏகாதஸி வ்ரதம்
இன்று இந்த வருடத்தின் கடைசி சுக்லபட்ச (வளர்பிறை) ஏகாதசி.
உபவாஸம்
முழு உபவாஸமோ (நிர்ஜலா), அல்லது தீர்த்தம் மட்டும், அல்லது கிழங்குகள் மட்டும் ஸ்வீகரித்துக் கொண்டு அநுஷ்டிக்க வேண்டும்.
பாராயணம்
ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம், ஸ்தோத்ர பாடம், 1008 முறை அஷ்டாக்ஷரி ஜபம், த்வய மஹாமந்த்ர ஜபம், சரமஸ்லோக ஜபம் ஆகியவற்றை (108×10=1080) முறை செய்யலாம்.
ஜாகரணை
இரவில் கண்விழித்து பகவந் நாமா சொல்லுதலும் பாகவதம் முதலான வைபவங்களை அனுபவிப்பதும் உத்தமம்.
பாரணை
நாளை காலை 8.45க்குள் பகவதாராதனம் செய்து பாரஸாதம் ஸ்வீகரித்துவிட வேண்டும். கோஷ்டி ப்ஸாதமோ, ததீயாராதனமோ, அதிதி ஸத்காரமோ அதி உத்தமம்.
ஸுபமஸ்து!
மங்களாநி பவந்து!