கண்ணிநுண் சிறுத்தாம்பு – பதவுரை – பாசுரம் 1

கண்ணிநுண் சிறுத்தாம்பினால் கட்டுண்ணப்
பண்ணிய பெருமாயன் என்னப்பனில்
நண்ணித் தென்குருகூர் நம்பி என்றக்கால்
அண்ணிக்கும் அமுதூறும் என் நாவுக்கே

கண்ணி – முடிச்சுகளை உடையதும்
நுண் – மிகவும் நுண்ணியதாவும் உள்ள
சிறுத்தாம்பினால் – சிறியதான கயிற்றால் (குட்டையான)
கட்டுண்ணப் பண்ணிய – தன்னைக்கட்டும் படி தானே அமைத்துக்கொடுத்த
பெருமாயன் – உயர்ந்த நிலையில் இருந்தாலும் தன்னை தாழ்த்திக்கொண்டு இருப்பவனும் ஆகிய
என்னப்பனில் நண்ணித் – (என் + அப்பன் + இல் ) – நம்மாழ்வாருக்கு உகப்பான கிருஷ்ணாவதாரத்தை அனுபவித்து, அதை விடுத்தது என் அப்பன் நம்மாழ்வாரே என்று, ஆழ்வாரைப்பெற்று (நண்ணி)  அவரைத்தான் அனுபவிக்கும் போது  
தென்குருகூர் நம்பி என்றக்கால் – திருக்குருகூரில் அவதரித்த கல்யாண குணங்கள் நிரம்பப்பெற்ற குணபூர்ணர் என்ற மாத்திரத்திலேயே
அண்ணிக்கும் – தித்திக்கும்
அமுதூறும் – அமுதமாகிய ஊற்று பெருக்கெடுத்தாற்போல்
என் நாவுக்கே – என் நா ஊறித்திளைக்கும் 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top