கண்ணிநுண் சிறுத்தாம்பு – பதவுரை – பாசுரம் 10

பயன் அன்றாகிலும்* பாங்கல்லர் ஆகிலும்*
செயல் நன்றாகத்* திருத்திப் பணி கொள்வான்*
குயில் நின்றார் பொழில் சூழ்* குருகூர் நம்பி*
முயல்கின்றேன்* உந்தன் மொய்கழற்க்கு அன்பையே*

பதவுரை:

பயன் அன்றாகிலும் – தாம் உபதேசிக்கும் ஒருவரால் எந்த வித உபகாரமும் இல்லாவிடினும்
பாங்கல்லர் ஆகிலும் – தம்முடைய உபதேசத்தைக்கேட்டு ஒரு பிரயோஜனமும் ஏற்படாமல் தம் நிலையிலேயே இருப்பவர்களாகிலும்
செயல் நன்றாகத் – தம் செயலாலே (கருணையால்) நன்றாம் படி
திருத்திப் பணி கொள்வான் – நல்வழியிலே திருத்தி பணிகொண்டு
குயில் நின்றார் – தம் (நம்மாழ்வார்) பாசுரங்களை குயில்கள் பயின்று சொல்லும்
பொழில் சூழ் – அழகிய பொழிகளால் சூழப்பட்ட
குருகூர் நம்பி – குருகூரில் அவதரித்த குணபூர்னரான ஆழ்வாரிடம்
முயல்கின்றேன் – மீண்டும் மீண்டும் முயற்சிக்கின்றேன்
உந்தன் மொய்கழற்க்கு – தன்னை அண்டினவரின் மேல் விழுந்து காக்கும் தன்மையுடைய திருவடிகளுக்கு
அன்பையே – அன்படிமைசெய்யவே

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top