அன்பன் தன்னை* அடைந்தவர்கட்கெல்லாம்
அன்பன்* தென் குருகூர் நகர் நம்பிக்கு*
அன்பனாய்* மதுர கவி சொன்ன சொல்
நம்புவார் பதி* வைகுந்தம் காண்மினே*
பதவுரை:
அன்பன் தன்னை – விரோதியிடத்திலும் காருண்யம் கொண்டவனான எம்பெருமானை
அடைந்தவர்கட்கெல்லாம் – சரணாக பற்றினவர்களுக்கெல்லாம்
அன்பன் – கருணையை பொழிபவனாய்
தென் குருகூர் – தென் குருகூரில் அவதரித்த
நகர் நம்பிக்கு – திருநகரி குண பூரணரான ஆழ்வாரிடத்தில்
அன்பனாய் – அதி ப்ரீத்தி உடையவராய்
மதுர கவி – மதுரமான (தேனாக உதிக்கின்ற) வாக்கினை உடைய ஸ்ரீ மதுரகவியாழ்வார்
சொன்ன சொல் – அருளிச்செய்த பாசுரங்களை
நம்புவார் பதி – தனக்கு தஞ்சம் என்று கொண்டிருப்பவர்களுடைய இருப்பிடம்
வைகுந்தம் காண்மினே – நிச்சயம் “பரமபதம்” என்றே கண்டுகொள்ளுங்கள்.