நாவினாற்நவிற்றின்பம் எய்தினேன்
மேவினேன் அவன் பொன்னடி மெய்மையே
தேவுமற்றறியேன் குருகூர்நம்பி
பாவினின்னிசை பாடித்திரிவனே.
நாவினாற் நவிற்றின்பம் எய்தினேன் – நாவினால் சொல்லப்படும் சொல் ஒன்றினாலேயே முழுமையான இன்பத்தையடைந்தேன்.
மேவினேன்- என் தலைக்கு மேலாக பெற்றேன்.
அவன் பொன்னடி – ஆழ்வாரது கமலப்பதங்களை.
மெய்மையே – இது சத்யமான ஒன்றாகும்.
தேவுமற்றறியேன்- வேறு தெய்வம் உண்டு என்று நான் அறியவும் வேண்டா.
குருகூர்நம்பி – தென்திருக்குருகூரில் அவதரித்த ஆழ்வாரைத் தவிர.
பாவினின்னிசை – திருவாய்மொழியின் இசையை
பாடித்திரிவனே – இவ்வுலகத்தில் தாரகமாய்ப் பாடித்திரிவனே.