கண்ணிநுண் சிறுத்தாம்பு – பதவுரை – பாசுரம் 3

திரிதந்தாகிலும் * தேவ பிரானுடை*
கரிய கோலத்* திரு உருக் காண்பான் நான்*
பெரிய வண்குருகூர்* நகர் நம்பிக்கு ஆள்
உரியனாய்* அடியேன் பெற்ற நன்மையே*

திரிதந்தாகிலும் – தேவுமற்றறியேன் என்று இருந்தாலும் (ஆழ்வாரைத்தவிர வேறு எந்த தெய்வத்தை பற்றியும் அறிய வேண்டாம் என்று இருந்தாலும்)
தேவ பிரானுடை – எம்பெருமானே என்மேல் கடாக்ஷித்தருளி அவனுடைய
கரிய கோலத்திரு உரு – உகப்பான கரிய கார்முகில் போன்ற சேவையை தன் தேவிமார்களுக்கும் ஆழ்வாருக்கு சாதித்தபடியே
காண்பான் நான் – அடியேனுக்கும் சாதிக்கப்பெற்றேன்  
பெரிய வண்குருகூர் நகர் நம்பிக்கு – பெருமையும் புகழும் மிக்க திருக்குருகூரில் அவதரித்த சிறந்த கல்யாண குணங்களையுடைய ஆழ்வாருக்கே  
ஆள் உரியனாய் அடியேன் – உரிய அடியனாய் இருக்கப்பெற்றது 
பெற்ற நன்மையே – அடியேன் பெற்ற பெரும் பேறு

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top