நன்மையால் மிக்க* நான்மறையாளர்கள்*
புன்மையாகக்* கருதுவர் ஆதலின்*
அன்னையாய் அத்தனாய்* என்னை ஆண்டிடும்
தன்மையான்* சடகோபன் என் நம்பியே*
நன்மையால் மிக்க – ஆத்ம குணங்களோடு அறநெறியில் நிற்பவர்கள்
நான்மறையாளர்கள் – அவ்வறநெறியில் நிற்க ஊக்குவிக்கின்ற வேதங்களை ஆதாரமாக கொண்டவர்கள்
புன்மையாகக் – தாழ்மையாகக்
கருதுவர் – எண்ணுவர்
ஆதலின் – இப்படி இவர்கள் எண்ணும் காரணத்தினாலேயே
அன்னையாய் அத்தனாய் – (ஆழ்வார்) அடியேனுக்கு தந்தையும் தாயும் ஆகி
என்னை ஆண்டிடும் – “எவரும் இவனை காப்பாற்றுவோரில்லை” என்று அடியேனை ஆட்கொண்டு
தன்மையான் – போக்கிடம் அற்றவர்களுக்கு புகலிடம் தருவதையே தன்னுடைய ஸ்வபாவமாக கொண்ட
சடகோபன் – சடம் எனும் வாயுவை தன் கால்களால் எட்டித்தள்ளி கோபித்த ஸ்வாமி நம்மாழ்வாரே
என் நம்பியே – அடியேனுக்கு நாதனும் ஸ்வாமியும் ஆவார்.