கண்ணிநுண் சிறுத்தாம்பு – பதவுரை – பாசுரம் 5

நம்பினேன்* பிறர் நன்பொருள் தன்னையும்*
நம்பினேன்* மடவாரையும் முன்னெலாம்*
செம்பொன் மாடத்* திருக்குருகூர் நம்பிக்கு
அன்பனாய்* அடியேன் சதிர்த்தேன் இன்றே

நம்பினேன் – நான் எனதென்று திடமாக கொண்டேன் 

பிறர் – சித்து அசித்துக்களுக்கு நாதனாக உள்ள நாராயணனே 

நன்பொருள் தன்னையும் – கௌஸ்துபம் போன்று விரும்பி ஏற்றுக்கொள்ளத்தக்க ஆத்மாவை 

நம்பினேன் – நிலையானதென்று கொண்டேன் 

மடவாரையும் – நிலையில்லாத பெண்ணின்பம் முதலானவற்றை 

முன்னெலாம் – இதுவரை அடியேன் கழித்த காலத்தில் எல்லாம் 

செம்பொன் மாடத் – செம்பொன் மாடங்களை வைத்தாற்போல் வரிசையான மாடங்களை உடைய 

திருக்குருகூர் நம்பிக்கு – திருக்குருகூரில் அவதரித்த நிறைந்த குணங்களை உடைய ஆழ்வார்க்கு 

அன்பனாய் அடியேன் – அன்புக்குரியோனாயும் அடியோனாயும் 

சதிர்த்தேன் இன்றே – பேறு பெற்றேன் இன்று.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top