கண்ணிநுண் சிறுத்தாம்பு – பதவுரை – பாசுரம் 8

அருள் கொண்டாடும்* அடியவர் இன்புற*
அருளினான்* அவ்வருமறையின் பொருள்*
அருள் கொண்டு* ஆயிரம் இன்தமிழ் பாடினான்*
அருள் கண்டீர்* இவ்வுலகினில் மிக்கதே*

பதவுரை:

அருள் கொண்டாடும் – எம்பெருமானுடைய அருளையே கொண்டாடிக் கொண்டிருக்கிறன்ற அடியவர் – இவ்வாழ்வாரைப்போல உள்ள அடியோர்கள்
இன்புற – மகிழ்ந்திருக்க வேண்டி 
அருளினான் – திருவாய்மொழியை அருளி  
அவ்வருமறையின் பொருள் – மிகவும் அரிதான வேதத்தின் அர்த்தத்தை 
அருள் கொண்டு – எம்பெருமானின் அருளையே துணையாகக்கொண்டு 
ஆயிரம் இன்தமிழ் – இனிய தமிழால் ஆயிரம் பாசுரமாக 
பாடினான் – பாடின அடியாராகிய ஆழ்வாருடைய 
அருள் கண்டீர் – கருணையை கண்டீர்கள் என்றால் 
இவ்வுலகினில் மிக்கதே – இவ்வுலகைவிட பெரியதே ஆகும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top