மிக்க வேதியர்* வேதத்தின் உட்பொருள்*
நிற்கப் பாடி* என் நெஞ்சுள் நிறுத்தினான்*
தக்க சீர்ச்* சடகோபன் என் நம்பிக்கு* ஆள்
புக்க காதல்* அடிமைப் பயன் அன்றே*
பதவுரை:
மிக்க வேதியர் – வேதாந்தமான உபநிஷத்தையே நெறியாக கொண்டவர்களுடைய
வேதத்தின் உட்பொருள் – வேதாந்தத்தின் உட்பொருளான பாகவத பரிமளிப்பை (சேஷத்வம்)
நிற்கப் பாடி – எப்போதும் நிலைத்திருக்கும் படி பாடி
என் நெஞ்சுள் – அடியேனுடைய நெஞ்சினுள்ளே
நிறுத்தினான் – பொருத்தினான்
தக்க சீர்ச் சடகோபன் – எல்லா மேன்மைகளை நிறைந்திருக்கின்ற சடகோபனான
என் நம்பிக்கு – ஸ்வாமி நம்மாழ்வார் எனும் குணபூர்ணருக்கு
ஆள் புக்க காதல் – அடிமை செய்ய வேண்டும் என்கிற அவா (ப்ரேமை)
அடிமைப் பயன் அன்றே – இன்ப பயன் தரும் அடிமைத்தனம் அன்றோ?