ஶ்ரீசைலேச தயாபாத்ரம் தீபக்யாதி குணார்ணவம்|
யதீந்திர ப்ரவணம் வந்தே ரம்ய ஜாமாதரம் முனிம்||
தனியனை சமர்ப்பித்தவர் : ரங்கநாயகம் என்னும் சிறுவன் வடிவில் வந்த, சாட்சாத் ஶ்ரீரங்கநாதப் பெருமாளே.
ஶ்ரீசைலேச – “ஶ்ரீசைலேசர்” என்கிற ஸ்வாமி ஸ்ரீதிருவாய்மொழிப் பிள்ளையின்
தயாபாத்ரம் – எல்லையற்ற கருணைக்குப் பாத்திரமானவரும்
தீபக்யாதி – பக்தி, ஞானம், வைராக்யம் போன்ற
குணார்ணவம் – குணங்கள் நிறைந்த சமுத்திரம் போன்றிருப்பவரும்
யதீந்திர ப்ரவணம் – யதிராஜரான ஸ்ரீ ராமானுஜர் மீது அளவு கடந்த பக்தி நிறைந்தவருமான
வந்தே ரம்ய ஜாமாதரம் முனிம் – அழகிய ஸ்ரீ மணவாள மாமுனிகளை அடியேன் வணங்குகிறேன்
(ரம்ய – அழகிய) (ஜாமாது – மணவாளன்)