வாக்ய குருபரம்பரை

அஸ்மத் குருப்யோ நம:

எனக்கு பஞ்சஸம்ஸ்காரங்களைச் செய்து வைஷ்ணவனாக்கிய எனது ஆசார்யனை வணங்குகிறேன்

அஸ்மத் பரமகுருப்யோ நம:

எனது ஆச்சார்யனின் ஆசார்யனையும் அவர் சமகாலத்து ஆச்சார்யர்களையும் வணங்குகிறேன்

அஸ்மத் ஸர்வ குருப்யோ நம:

எனது எல்லா ஆச்சார்யர்களையும் வணங்குகிறேன்

ஸ்ரீமதே ராமாநுஜாய நம:

ஸ்ரீவைஷ்ணவஸ்ரீயையும் திருவரங்கச் செல்வத்தையுமுடைய எம்பெருமானாரை வணங்குகிறேன்

ஸ்ரீ பராங்குச தாஸாய நம:

ஆச்சார்ய அபிமானம் ஆகிற செல்வமுடைய பெரியநம்பியை வணங்குகிறேன்

ஸ்ரீமத் யாமுந முநயே நம:

வேதாந்த சித்தாந்தமாகிற செல்வமுடைய ஆளவந்தாரை வணங்குகிறேன்

ஸ்ரீ ராமமிஸ்ராய நம:

ஆச்சார்ய கைங்கர்யம் ஆகிற செல்வரான மணக்கால் நம்பியை வணங்குகிறேன்

ஸ்ரீ புண்டரீகாக்ஷாய நம:

ஆச்சார்ய அனுக்ரஹம் ஆகிற செல்வமுடைய உய்யக்கொண்டாரை வணங்குகிறேன்

ஸ்ரீமந் நாதமுநயே நம:

ஸ்ரீவைஷ்ணவ குலபதியும், ப்ரபந்ந குலத்துக்கு முதல்வரும், பரமாச்சார்யரான நம்மாழ்வாரிடம் அருளிச் செயல் செல்வம் பெற்றவரான ஸ்ரீமந் நாதமுநிகளை வணங்குகிறேன்

ஸ்ரீமதே சடகோபாய நம:

மயர்வற மதிநலம் அருளப்பெற்ற ஸ்ரீவைஷ்ணவஸ்ரீயை உடையவரான ஸ்வாமி நம்மாழ்வாரை வணங்குகிறேன்

ஸ்ரீமதே விஷ்வக்ஸேநாய நம:

பெரிய பிராட்டியாரிடம் ரஹஸ்யத்ரய உபதேசம் பெற்ற மிக்க செல்வரான சேனை முதல்வரை வணங்குகிறேன்

ஸ்ரீயை நம:

தேவதேவ திவ்ய மஹிஷியாய் எம்பெருமானுக்கு வல்லபையாய் புருஷகாரம் மிக்க செல்வமுடையவளை வணங்குகிறேன்

ஸ்ரீதராய நம:

திருவுக்கும் திருவாகிய செல்வனான எம்பெருமானை வணங்குகிறேன்.

*** வாக்ய குருபரம்பரையில் முதல் மூன்று வாக்யங்கள் வேதவாக்யங்கள். 

*** மற்றவை ஸ்வாமி ஸ்ரீ கூரத்தாழ்வான் அருளிச்செய்தது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top